Monday, December 28, 2009

புத்தகம்

கசங்காமல் படியுங்கள் !
புத்தகமும் பெண்ணும் ஒன்றே !

Tuesday, December 22, 2009

முத்தம்

முத்தத்தில் ஊமை
அது சத்தமில்லா முத்தம்
நான்கு சுவர் தாண்டி கேட்டால்
அது முரட்டு முத்தம்
கண் திறந்து கொடுக்கும் முத்தம்
அது கானல் முத்தம்
கண் மூடி கொடுத்தால் தான்
அது காதல் முத்தம்
அன்புடன் கொடுக்கும்
எல்லா முத்தமும் அழகு முத்தம்
அன்பில்லா முத்தமெல்லாம்
வெற்று முத்தம் !

பின் குறிப்பு :
பூக்களை மட்டும் முத்தமிட்டவன் எழுதியது!

Monday, November 30, 2009

அதிசய படைப்பு

உன்னை படைத்தவன் நல்லவன்
அதனால் தான் அனுப்பி வைத்தான் ;
இல்லையென்றால் அவன் படைத்ததில் best
நீ என்று அவன் பக்கத்தில் வைத்திருப்பான் !


Tuesday, September 8, 2009

ஈர முத்தம்

ஈர முத்தம் தர இன்னும்
வீரம் வரவில்லை கண்ணே
தாலி ஏறட்டும் தருகிறேன்
ஈரம், காரம்(Spicy) என்று
எல்லா ஜாதி முத்தங்களும் ....

Saturday, July 25, 2009

போதை

அழகான பொண்ணு மொக்க போட்டா அது போதை !
ஆனா போதைல இருக்கவன் மொக்க போட்டா அது உபாதை :>(

Saturday, July 18, 2009

Nokia

அண்ணலும் நோக்கினான்!
அவளும் நோக்கினாள்!
Nokia Cell Phone
அழுதது :>)

Thursday, July 9, 2009

என்னவளே !

அழகான சிலை என்க நீ
உயிரற்ற கல் இல்லை
வானத்து நிலவென்க
வெகு தொலைவிலும் இல்லை
மலர் என்க ஒரே நாளில்
உலரப் போவதும் இல்லை
என் ஒப்புமை இல்லா உவமையே !

Saturday, June 27, 2009

நீயில்லா அப் பின்னிரவு ..

நீயில்லா அப் பின்னிரவில்
நிலவு தேய்ந்த வேகத்தில்
இரவு தேயவில்லை :>(
நொடி முள்ளோ மணி முள்
ஆகிப்போனது :>(
இப் பிரிவையும் ரசித்தேன் :>)
நீ வைத்த ரோஜா செடியின்
மொட்டு மலர்ந்த அதிசயத்தை
முதன் முதலில் கண்டதால்
நீயில்லா அப் பின்னிரவில் ..

Monday, June 22, 2009

அரசியல்

குடும்ப அரசியல்
நாட்டிற்கும்
குடும்பத்திற்குள் அரசியல்
வீட்டிற்கும் ஆகாது :>)

Friday, June 12, 2009

இயங்கும் பூமி !

மலரா மொட்டு !
சிதைந்த கரு!
பகல் கனவு!
மொட்டை கிணறு !
சொல்லா காதல் !
.
.
இயங்கும் பூமி !

Monday, May 25, 2009

நிர்வாணம்

உடைகள் உரித்ததில்
சில உண்மைகள் உரிந்ததில்
விளைந்த நிர்வாணத்தில்
கிழிந்தன சில போலி நிஜங்கள் !

Friday, May 15, 2009

கடங்காரன்தன் காசை
தான் வாங்க
கடங்காரன் போல்
காத்திருப்பார்
ATM வாசலில் !

Tuesday, May 12, 2009

ஈழத்தில் நடப்பதென்ன - 3


வடிக்க ஒரு கை அரிசியில்லை
வற்றிய வயிற்றில்
பசியென்ற உணர்வே இல்லை
தேம்பி அழ கண்ணிலோ
நீரும் இல்லை
கணவனோ கன்னி வெடியில் மரணம்
கருவிலே குழந்தையும் மரணம்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
ஒப்பாரி வைக்க ஊரும் இல்லை
என்னை மட்டும் ஏன்
விட்டு வைத்தாய் கடவுளே
என்றாவது ஒரு நாள் ஈழம் மலரும்
பார்த்து விட்டு சாகவா ?

ஈழத்தில் நடப்பதென்ன - 2

சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?

வெடி குண்டு

உலோகத்துகள் அடைத்து
வெடி குண்டு வைக்கிறாய்
உன் இதயம் என்ன உலோகமா?
துடி துடித்து இறப்பவனின்
இதயம் தசையல்லவா ?

கதை

நான் கதைக்கு கரு தேடினேன்
அவள் கருவிற்கு கதை தேடினாள்!!

Good Night SMS

என் இரவு
சிறு கதையா?
நெடுந் தொடரா ?
அவளின் Good night SMS
முடிவு செய்யும் !

தடையில்லா காதல்

தார் சாலை - காதலி
தெரு விளக்கு - காதலன்
காதலியின் பள்ளம் மேடு பார்த்து
கண்ணடித்து கண்ணடித்து
களைத்து போன காதலன்
இவர்கள் காதலுக்கு தடையே இல்லை !
(:>) Because Our corporation will never change the road and the street light)

Monday, May 11, 2009

மனிதம்

மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம் !
மனிதம் வளர்ப்போம்
மாண்புயர்வோம்!

Friday, May 8, 2009

உங்கள் ஓட்டு விலை மதிப்பற்றது ..

உடலை விற்பது
விபச்சாரம் எனில்
ஓட்டை விற்பதும்
விபச்சாரமே ...

Thursday, May 7, 2009

ஈழத்தில் நடப்பதென்ன -1

மருதாணியால் சிவக்கும் கைகள்
ஆயுதம் ஏந்தி சிவந்ததென்ன
பால் சுரக்கும் முலை அறுபட்டு
ரத்தம் சுரப்பதென்ன
துப்பாக்கியிடம் கற்பிழக்கும்
வக்கிர கொடுமை என்ன
இறந்த பிறகும் துகிளுரிக்கப்படும்
பேடித்தனமென்ன
பிறந்த மண்ணில் பிழைப்பதற்கா
இத்தனை கொடுமைகள்?
நூறு ஆண்டு நலமாய் வாழ
நாங்கள் கேட்கவில்லை
இன்று இரவு தூங்கினாலே
போதும் போதும் !!

Tuesday, May 5, 2009

காக்கை

உறவினர் மறுத்ததால்
அநாதை பிணம் பல
அரசு மருத்துவமனையில்!
இறந்த தோழனுக்காய்
இழவு கொண்டாடின
பல நூறு காக்கைகள் !