Thursday, September 23, 2010

நிலாக்காரி - 2

மேகம் என்ன
உன் முறை மாமனா?
நான் பார்க்கும் போதெல்லாம்
உன்னை முக்காடிட்டு
மூடி விடுகிறானே ! :>(

Saturday, July 10, 2010

வாழ்க்கை

வாழ்க்கை என்பது
வளரும் கால் நகம் போல் !
கண்ணிய நகமும்
கடந்தே போகும் !
கலர் பூச்சுகளும்
கரைந்தே போகும் !
இறந்த நகத்தை
வெட்டினால் தானே
முன்னேறி நடப்பது
எளிதானதாகும் !

Saturday, July 3, 2010

உன் புன்னகை


உன் புன்னகையை படம்
பிடித்த என் கேமராவின்
வாய்(Shutter) மூட
வெகு நேரமாயிற்று !

Friday, March 26, 2010

மா தவம்

மங்கையராய்ப் பிறக்க
மட்டுமன்று
ஒவ்வொரு மாத விடாயைக்
கடக்கவும் மா தவம் செய்திட
வேண்டுமம்மா !

"It is not so easy being women"

Wednesday, March 24, 2010

செயற்கைப் பூஞ்செடி

எந்திரமாய் இயங்கிக்
கொண்டிருந்த அவ்வலுவலக
மனிதர்களைப் போலவே
உணர்வற்று நின்றது ஆங்கே
மூலையில் வைத்திருந்த
செயற்கைப் பூஞ்செடி ..

Tuesday, March 2, 2010

நிலாக்காரி

ஏய் நிலாக்காரி !
பருவம் வந்த
என் பவுர்ணமியே !
ஏனடி அவ்வப்போது
இளைத்து போகிறாய் ?
சோறூட்ட மட்டும்
அழைக்கிறார்கள் என்ற கோபமா?
இல்லை இங்குள்ள பெண்களோடு
ஒப்பிட்டு உன் அழகை குறைக்கிறார்களா?
அடியே என்னருகே மட்டும் நீ இருந்தால்
உன்னை இளைக்காமல் தடுத்துவிடும் என் காதலடி !

Tuesday, February 16, 2010

கிரிக்கெட் மயானம்

வாழ்க்கை ஆட்டத்தில்
அவுட் ஆனவர்கள் சூழ !
மயானத்தின் மத்தியில்
நடந்து கொண்டிருந்தது
குப்பத்து சிறுவர்களின்
கிரிக்கெட் போட்டி !

Thursday, January 21, 2010

ஆணாதிக்கம் தவிர் !

உன் ஆடைகளைத் துவைக்கும் போது
சலவைக்காரி ஆகவும்
உனக்குச் சமைக்கும் போது
சமையல்க்காரி ஆகவும்
உனக்கு நோயென்றால்
மருத்துவச்சி ஆகவும்
மாலைநேரத்தில் உன் குழந்தைகளுக்கு
ஆசிரியை ஆகவும்
படுக்கை அறையில் உனக்கு
ஒரு வேசி ஆகவும்....
இப்படி பல வேஷம் போடும்
உன் மனைவிக்காக
நீ ஆண் என்ற ஒரு ஆணவ வேஷம்
களைப்பாயா ?

Note : This is only for men who treat women so.
There are men who idolize them. I belong to the latter group. :>)