ஏய் நிலாக்காரி !
பருவம் வந்த
என் பவுர்ணமியே !
ஏனடி அவ்வப்போது
இளைத்து போகிறாய் ?
சோறூட்ட மட்டும்
அழைக்கிறார்கள் என்ற கோபமா?
இல்லை இங்குள்ள பெண்களோடு
ஒப்பிட்டு உன் அழகை குறைக்கிறார்களா?
அடியே
என்னருகே மட்டும் நீ இருந்தால்
உன்னை இளைக்காமல் தடுத்துவிடும் என் காதலடி !