சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டிற்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும்
குழந்தைகள் அங்கே !
இறந்த பின்பு கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே !
மரங்கள் வெட்டுண்டாலே
மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment