Tuesday, March 2, 2010

நிலாக்காரி

ஏய் நிலாக்காரி !
பருவம் வந்த
என் பவுர்ணமியே !
ஏனடி அவ்வப்போது
இளைத்து போகிறாய் ?
சோறூட்ட மட்டும்
அழைக்கிறார்கள் என்ற கோபமா?
இல்லை இங்குள்ள பெண்களோடு
ஒப்பிட்டு உன் அழகை குறைக்கிறார்களா?
அடியே என்னருகே மட்டும் நீ இருந்தால்
உன்னை இளைக்காமல் தடுத்துவிடும் என் காதலடி !

1 comment:

Anonymous said...

சீரியசான கவிதையின் ஊடே ஒரு ரசனைக்கவிதை...நிலாமேல் இவ்வளவு காதலா...

அடியே என்னருகே மட்டும் நீ இருந்தால்
உன்னை இளைக்காமல் தடுத்துவிடும் என் காதலடி ...

பிடித்து வைத்து கொள்வதுதானே...நிலாப்பென் இளைப்பில் இத்தனை பரிவா.. கஷ்ட்டமாக இருக்குதுங்க...ஆமா ஏன் இப்படி இளைக்கிறாள்...

ரிச்சார்டை நினைத்தா...

பருவம் வந்த
என் பவுர்ணமியே ...ப‌வுர்ண‌மி நில‌வு ரிச்சார்டுக்கு ப‌ருவம் எய்த பெண்ணாக‌‌ தோணுகிற‌தா...
சோறூட்ட மட்டும்.....அவ‌ளைகாட்டி சோரூஉட்டுகிறார்க‌ளேத்த‌விர‌ யாராவ‌து ஊட்டுகிறார்க‌ளா...நீங்க‌ள் முய‌ற்ச்சியுங்க‌ளேன்...ஒரு காத‌லானாக‌...
பெண்களோடு
ஒப்பிட்டு உன் அழகை குறைக்கிறார்களா....ஏங்க‌ப்பா....இவ்வ‌ள‌வு காத‌லா/ஆனுதாப‌மா...உங்க‌ளின் நிஜ‌க்காத‌லி ப‌டித்தால் நிச்சிய‌மாக‌ கோப‌ம் கொள்வார்க‌ள்...அவ‌ர் அழ‌கை குறைத்து ம‌திப்பிட்டாள் கோப‌ம் வ‌ராதாஎன்ன‌..

Post a Comment